ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
Horoscope
Astrology
Hinduism
By Sahana
ஜோதிடத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுவது ராகு கேது பெயர்ச்சி. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும், ஒருவருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி, பொருளாதார நிலை, குடும்ப உறவுகள் மற்றும் மனநிலை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கலாம்.

அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2026 ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நிகழ்கிறது. இந்தப் பெயர்ச்சியின் போது ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
| மேஷ ராசி | மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பத்தாம் வீட்டிலும், கேது நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இதனால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் பல்வேறு முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகலாம். குறிப்பாக, ஏழரை சனியின் தாக்கத்தையும் எதிர்கொண்டு வரும் மேஷ ராசிக்காரர்கள் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். தொழில் மற்றும் பணியிடத்தில் மற்றவர்கள் கூறும் எதிர்மறையான கருத்துகளைக் கேட்டு பயப்பட வேண்டியதில்லை. புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். இருப்பினும், உங்களால் முடிக்க முடியாத வேலைகளுக்கு அதிகமாக வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் கோபப்படாமல் பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது |
| ரிஷப ராசி | ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டிலிருந்த ராகு ஒன்பதாம் வீட்டிற்கும், நான்காம் வீட்டிலிருந்த கேது மூன்றாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த மாற்றத்தால் ஆன்மீகம், பயணம் மற்றும் தெய்வ வழிபாடுகளில் அதிக ஈடுபாடு ஏற்படலாம். குறிப்பாக, திருப்பதி திருமலை பெருமாள் வழிபாடு ரிஷப ராசிக்காரர்களுக்கு விசேஷமானதாகக் கூறப்படுகிறது. இதுவரை கோயில்களுக்குச் செல்லாதவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளலாம். மகான்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். |
| மிதுன ராசி | மிதுன ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டிலிருந்த ராகு எட்டாம் வீட்டிற்கும், மூன்றாம் வீட்டிலிருந்த கேது இரண்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பு சில எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலகட்டமாக இது இருக்கும். வேற்றுமொழி பேசும் நபர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகலாம். திருமணத் தடைகள் நீங்குவதற்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. |
| கடக ராசி | கடக ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிலிருந்த ராகு ஏழாம் வீட்டிற்கும், இரண்டாம் வீட்டிலிருந்த கேது முதல் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பினால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் சில சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். குறிப்பாக, திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். ஏற்கனவே திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையற்ற நம்பிக்கை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. |
| சிம்ம ராசி | சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டிலிருந்த ராகு ஆறாம் வீட்டிற்கும், முதல் வீட்டிலிருந்த கேது பன்னிரண்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சியால் எதிரிகளை வெல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகலாம். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் மற்றும் படிப்பு தொடர்பான மாற்றங்கள் ஏற்படலாம். |
| கன்னி ராசி | கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டிலிருந்த ராகு ஐந்தாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிலிருந்த கேது பதினொன்றாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பு பணவரவு மற்றும் ஆன்மீக ரீதியாகச் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, பழைய கடன்களைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடலாம். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. |
| துலாம் ராசி | துலாம் ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டிலிருந்த ராகு நான்காம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிலிருந்த கேது பத்தாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சி தொழில், குடும்பம் மற்றும் பொருளாதார விஷயங்களில் கலவையான பலன்களை வழங்கலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் திடீரென சில குழப்பங்கள் ஏற்படலாம். குறிப்பாக, கூட்டாளிகள் அல்லது உடன் பணிபுரிபவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம். எனவே, தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நிதானமாகச் செயல்படுவது நல்லது. |
| விருச்சிக ராசி | விருச்சிக ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டிலிருந்த ராகு மூன்றாம் வீட்டிற்கும், பத்தாம் வீட்டிலிருந்த கேது ஒன்பதாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இதனால் தனிப்பட்ட தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்கொண்டு வந்த எதிர்ப்புகள் குறையலாம். உங்களுடைய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம். குறிப்பாக, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தைரியமாக முடிவுகளை எடுப்பதற்கான சூழல் உருவாகலாம். |
| தனுசு ராசி | தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டிலிருந்த ராகு இரண்டாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிலிருந்த கேது எட்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சி குடும்பம், பணம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டமாக அமையலாம். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. குறிப்பாக, பெற்றோர் மற்றும் பெரியவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். |
| மகர ராசி | மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டிலிருந்த ராகு முதல் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிலிருந்த கேது ஏழாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சியால் வாழ்க்கையில் பல புதிய மாற்றங்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம். வீடு வாங்குவது, வீட்டை புதுப்பிப்பது, நகைகள் வாங்குவது போன்ற சுப செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் திருமணம் மற்றும் பிற சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு வேலை மாற்றம் அல்லது தனியாகத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம். |
| கும்ப ராசி | கும்ப ராசிக்காரர்களுக்கு முதல் வீட்டிலிருந்த ராகு பன்னிரண்டாம் வீட்டிற்கும், ஏழாம் வீட்டிலிருந்த கேது ஆறாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இதனால் தொழில், வியாபாரம் மற்றும் படிப்பு தொடர்பான விஷயங்களில் சில முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். பணவரவு அதிகரிப்பதுடன் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். முதலீடுகள் தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான சூழல் அமையலாம். |
| மீன ராசி | மீன ராசிக்காரர்களுக்கு பன்னிரண்டாம் வீட்டிலிருந்த ராகு பதினொன்றாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிலிருந்த கேது ஐந்தாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பு லாபம், தொழில் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கலாம். குறிப்பாக, வேற்றுமொழி பேசும் நபர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக எதிர்கொண்டு வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் படிப்பு போன்ற அனைத்து விஷயங்களிலும் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எதிர்பாராத பணவரவு மற்றும் புதிய வாய்ப்புகளும் உருவாகலாம். |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US