இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைந்த இரு யாழ். மீனவர்கள் மீட்பு
Jaffna
India
Sri Lanka Fisherman
By Vironika
பலத்த காற்று, கனமழையால் திசைமாறி இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைந்த இரு யாழ். மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 27 வயது இளைஞன், 36 வயது இளைஞன் ஆகிய இரு மீனவர்களும் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக திசைமாறி இந்தியக் கடற்பரப்புக்குள் சென்றுள்ளனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் லைட்ஹவுஸ் கடற்கரையில் தமது மரப்படகுடன் கரை ஒதுங்கிய இருவரையும் இந்திய மரைன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரு இளைஞர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US