ருவன்வெலிசாய போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ; உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு
அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று செவ்வாய்க்கிழமை (10) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகளால் ருவன்வெலிசாயவுக்கு அருகில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அமைதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆகவே தாக்குதல் சம்பவம் சம்பந்தமாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அடிப்படைய உரிமை மனு ஓய்வுபெற்ற இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் மற்றும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.