2004ஆம் ஆண்டு போல் இன்றும் சுனாமி வருமா?
2004ஆம் ஆண்டு இதே போன்ற நாளில் தான் சுனாமி பேரலை இடம்பெற்றது போல இன்றும் நடைபெறும் என மக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை உட்பட பல நாடுகளை சுனாமி பேரலை தாக்கிய நிலையில், இன்றும் 19 வருடங்களுக்கு பிறகு அதே பௌர்ணமி தினத்தில் சுனாமி வரும் என்பது நிச்சமில்லை.
இருப்பினும், நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அமைப்பு நாட்டில் இருப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உடுவப் பௌர்ணமி வருவதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.