கந்தளாய் பாடசாலையில் காட்டு யானைகள் அட்டகாசம்!
கந்தளாய், பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் மூன்று வகுப்பறைகள் இன்று (30) அன்றுஅதிகாலை காட்டு யானைகளின் தாக்குதலுக்குள்ளாகிச் சேதமடைந்துள்ளன.
கந்தளாய் - சீனிபுர பகுதியில் அமைந்துள்ள பாடசலைக்குள் காட்டு யானைகள், அதிகாலை 4:00 மணியளவில் புகுந்தன. இதில் மூன்று வகுப்பறைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகப் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

யானைகளின் இந்தத் தாக்குதலினால் பாடசாலையின் 3-ஆம், 4-ஆம் மற்றும் 5-ஆம் தர வகுப்பறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைகள் சேதமடைந்துள்ள போதிலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தற்காலிகமாக மாற்று இடங்களில் கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், இவ்வாறான பாதிப்புகளைத் தடுக்கவும் உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.