மே மாதத்தில் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்; யார் யார் தெரியுமா!
மே மாதத்தில் 'கிரகங்களின் இளவரசன்' என்று அழைக்கப்படும் புதனும், தர்மத்தின் காவலனாக விளங்கும் சனி பகவானும் ஒரு வலியமையான யோகத்தை உருவாக்க போகிறார்கள்.
அதாவது சனியும், புதனும் இணைவதால் 'லாப திருஷ்டி யோகம்' உருவாக உள்ளது. இந்த யோகத்தினால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாறி அதிர்ஷ்ட மழை பொழியப் போகிறது.

அந்த 5 ராசிகள் ....
மேஷம்
சனி, புதன் கூட்டணியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்க போகிறது. உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த முட்டுக்கட்டைகள் அனைத்தும் விலகும்.
உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரமும், மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.
சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் நன்மைகள் கிடைக்கும்.
கன்னி
புதன், சனி சேர்க்கையால் கன்னி ராசியினருக்கு பொருளாதர வளர்ச்சி மட்டுமின்றி மன அமைதியும் ஏற்பட போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன்கள் கைக்கு வைத்து ஆச்சரியப்பட வைக்கும். வங்கி இருப்பு உயரும்.
செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். பணியிடங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.
புதன்கிழமைகளில் பசுவிற்கு பச்சை புல் அல்லது அகத்திக்கீரை வழங்குவது சிறந்தது.
துலாம்
புதனும், சனியும் சங்கமிப்பதால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கைத் தரம் உயரப் போகிறது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமண பேச்சுகள் கைகூடி வரும்.
புதிய வாகனங்கள், ஆடை அல்லது ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
சனிக்கிழமைகளில் பறவைகளுக்குத் தானியங்கள் வைப்பது யோகத்தை வலுப்படுத்தும்.
மகரம்
சனி பகவான் புதனுடன் இணைவது மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது. எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தேடித் தரும். சமூகத்தில் அதிகாரமிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும்.
நிதிப்பிரச்சனைகள் தீர்ந்து பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தந்தை அல்லது தாய் வழி உறவுகளிடம் இருந்து பூர்விக சொத்துகள் கிடைக்கும்.
உடல் ஊனமுற்றோர்க்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் சனி பகவானின் முழுமையான அருளை பெற முடியும்.
கும்பம்
சனி, புதன் கைகோர்ப்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப் போகிறார்கள். எதிர்பாராத இடங்களில் இருந்தும் பணம் வந்து உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்.
ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்கு உதவுங்கள் .
சனி - புதன் யோகத்தின் பலனை நீண்ட காலத்திற்குத் தக்கவைக்கும்.