30ஆவது ஆண்டில் IBC தமிழ் ; நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரனின் சிறப்பு பகிர்வு
உலகத் தமிழ் மக்களின் நம்பிக்கையான ஊடகமாக திகழும் IBC தமிழ் வானொலி, தனது 30ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1997ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி லண்டனில் தனது ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்த IBC தமிழ், ஆரம்ப காலத்தில் WRN - Vauxhall ஊடாக உலகத் தமிழர்களை சென்றடைந்தது.
தமிழீழம், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் குரலாகவும், நம்பகமான தகவல் தளமாகவும் IBC தமிழ் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
2014ஆம் ஆண்டு முதல் London Tamil Media Ltd நிறுவனத்தின் கீழ் செயற்பட்டு வரும் IBC தமிழ், 2015ஆம் ஆண்டு தொலைக்காட்சி சேவையையும் 24 மணி நேர இணையச் செய்திச் சேவையையும் அறிமுகப்படுத்தி தனது ஊடகப் பரப்பை மேலும் விரிவுபடுத்தியது.
இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் நவீன டிஜிட்டல் தளங்கள் ஊடாக உலகத் தமிழர்களை ஒரே தளத்தில் இணைக்கும் சர்வதேச ஊடக வலையமைப்பாக IBC தமிழ் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த 30 ஆண்டு ஊடகப் பயணத்தின் பின்னணி, எதிர்கால இலக்குகள் மற்றும் IBC தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் பகிர்ந்து கொள்ளும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.