கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வெளியான எச்சரிக்கை
கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை
இன்று (13) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.