லண்டனில் அசத்திய தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் காட்சிகள்
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற சிற்றூந்து பந்தய நிகழ்வில், முதலமைச்சர் விஜய் ரேசர் உடையில் திடீரென வருகை தந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ரேசிங் களத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் ரேசர் உடையில், இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு ஒன்றாக நிற்கும் நிழற்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இருவரும் ஒரே இடத்தில் இணைந்து தேசியக் கொடியை ஏந்தியுள்ள இந்த அரிய காட்சி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோர்ப்பரேட் பந்தய உடையில் அங்கு சென்றிருந்த விஜய், ரசிகர்களைப் பார்த்து கை அசைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், நடிகர் அஜித்திற்கு தனது ஆதரவையும் வாழ்த்துக்களையும் நேரில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து காணப்படும் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.