தனிப்பட்ட தகராறால் படுகொலை ; ஒருவர் கைது
நாகொல்லாகம, தாலமல்கம பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு
தாலமல்கம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றிய நிலையில், கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், முன்னெடுக்கப்பட்ட விசேட சோதன நடவடிக்கையின் போது குறித்த 59 வயது சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சம்பவத்திற்கான பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தாலமல்கம பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.