ஜிம் செல்லாமல் வேகமா வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த சீக்ரெட் தெரிஞ்சா போதும்
இன்றைய காலகட்டத்தில் எடையை குறைப்பது சவாலான காரியமாக உள்ளது. பிடித்த உணவுகளை கூட உண்ணாமல் கடுமையாக உடற்பயிற்சி செய்து பலரும் எடையை குறைக்கும் முயற்சியை செய்கின்றனர்.
ஆனால் சில எளிமையான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் ஜிம் செல்லாமல் கூட விரைவில் எடையை குறைக்க முடியும். ஆரோக்கியமான வழியில் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
ஆரோக்கியமான வழி
நம் அன்றாட அசைவுகள் கலோரி எரிப்பில் முக்கிய பங்கு பெறுகின்றன. ஒல்லியாக நினைத்தால் முறையான உடற்பயிற்சிகள் இல்லாவிட்டாலும் உடல் அசைவுகள் கூட போதும். உதாரணமாக போன் பேசும்போது அமராமல், நடந்து கொண்டே பேசலாம். நாள்தோறும் 3,000 முதல் 4,000 அடிகளுக்கு மேலாக நடக்க வேண்டும். இப்படி செய்பவர்கள் ஒரு மணி நேரம் ஜிம்மிற்கு போய்விட்டு நாள் முழுவதும் அமர்ந்திருக்கும் நபரை விட அதிக கலோரிகளை எரிக்கிறார்கள்.
எடை குறைக்க புரத உணவுகள் அவசியம். ஆனால் புரத உணவுகளை ஒரே நேரத்தில் மொத்தமாக உண்ணக் கூடாது. சம இடைவெளியில் சாப்பிட்டால் தசைகளை பராமரிக்க உதவுகிறது. காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் உணவில் 20 முதல் 25 கிராம் புரதம் எடுத்துக் கொள்ளலாம். இப்படி சாப்பிட்டால் அதிக பசி எடுக்காது. பகலில் ஆற்றலும் கிடைக்கும்.
மணிக்கணக்கில் கார்டியோ பயிற்சிகளை செய்யாமல் வாரத்தில் 3 முதல் நான்கு நாட்கள் வலிமை பயிற்சிகளை செய்யலாம். தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடல் எடை பயிற்சிகள் செய்தால் போதும். இதில் புஷ்-அப்கள், குந்துகைகள் (squats) போன்றவை அடங்கும். இதனை வீட்டிலேயே கூட செய்யலாம். இது 1 மணி நேரம் ஜாகிங் செல்வதை விடவும் உடலை நன்கு பராமரிக்க உதவும்.
நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விடவும் பல குறுகிய இடைவெளிகளில் செய்வது நல்லது. சில ஆய்வுகள், நாள் முழுக்க 5 முதல் 10 நிமிடங்கள் தீவிரமான உடல் அசைவுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை குறைக்க உதவுகிறது என கூறுகின்றன. உதாரணமாக, படிக்கட்டுகளில் ஏறுதல், மதிய உணவிற்கு முன்பு 15 குந்துகைகள் செய்தல் கூட நல்ல பலனை தரும்.
மினி உடற்பயிற்சிகள் ஆற்றலை அதிகப்படுத்திவிடும். நீண்டநேர பயிற்சியால் சோர்வடையும் உணர்வைத் தடுக்க உதவுகின்றன. தீவிரமாக பயிற்சி செய்தால் கார்டிசோல் மாதிரியான மன அழுத்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். இதனாலயே வயிற்றைச் சுற்றிலும் கொழுப்பு சேர வழிவகுக்கும்.
நல்ல தூக்கம், போதுமான ஓய்வு, உடல் நீட்சி ஆகியவை எடை குறைப்பை விரைவாக்கும். ஒருநாளுக்கு 7 முதல் 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் தேவை. இதுவே கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடையை குறைக்கும்.