மூவருக்கு மரணதண்டனை விதித்த களுத்துறை மேல் நீதிமன்றம்!
வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (13) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதியன்று களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றின்போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவுற்ற நிலையில், வழக்கின் தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு அறிவிக்கும் முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதியினால் நீதிமன்ற மண்டபத்தின் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டு, மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறு பணித்த பின்னரே இந்த மரண தண்டனை தீர்ப்பு வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது