நடக்கபோவதை பொறுத்திருந்து பாருங்கள்; ஈரானுக்கு கடும் அச்சுறுத்தல் விடுத்த ட்ரம்ப்!
இஸ்ரேல் - ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார். ஈரானியர்களுக்கு இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப், அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஈரானின் கடற்படை போய்விட்டது. அவர்களின் விமானப்படையும் இனி இல்லை. ஏவுகணைகள், ட்ரோன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.

மேலும் அவர்களின் தலைவர்கள் பூமியிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
அவர்கள் 47 வருடங்களாக உலகம் முழுவதும் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். இப்போது நான் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக அவர்களைக் கொன்று வருகின்றேன் என பதிவிட்டுள்ளார்.