ஈரானில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு; இன்னொரு முள்ளிவாய்கால் அவலம்!
அமெரிக்க - இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை தொடங்கியதிலிருந்து ஈரானில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு தேடி தெஹ்ரான் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து தப்பிச் செல்லும் மக்கள்
இந்த இடம்பெயர்வு 600,000 முதல் ஒரு மில்லியன் ஈரானிய குடும்பங்களைப் பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மோதல் காரணமாக பாதுகாப்பு தேடி தெஹ்ரான் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து தப்பிச் செல்லும் மக்கள் நாட்டின் வடக்கு மற்றும் கிராமப்புறங்களுக்கு நகர்ந்து செல்கின்றனர்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் தலைவர்களையும் அணுசக்தி உட்;கட்டமைப்பையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்துகின்றன.
போர் காரணமாக பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்கம் கூறுகிறது. மேலும் தாக்குதல்களில் தற்போது 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஈரானிய சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்காலில் இருந்து மக்கள் சாரைசாரையாக உயிரி கையில் பிடித்துகொண்டு வெளியேறியமை ஈழத்தமிழ் மக்களுக்கு இன்றைய ஈரானின் நிலை நினைவூட்டி நெஞ்சை கனக்க செய்கின்றது.