சிறுவர் உரிமைகள் சட்டத்தை வரையறுக்க அமைச்சரவை அனுமதி
நாட்டில் சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் உள்ளடக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதி
இதற்காக 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி அமைச்சரவை வழங்கிய அனுமதியின் அடிப்படையில் சட்ட வரைவாளர் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருந்தார்.
மேலும், ஆரம்பத்தில் ‘சிறுவர் உரிமைகள் தொடர்பான கூட்டிணைப்புச் சட்டம்’ எனப் பெயரிடப்பட்டிருந்த சட்டமூலத்தின் பெயரை ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, கருத்தாக்கப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய விடயங்களையும் இணைத்து சட்டமூலத்தை விரைவாகத் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.