இன்று முதல் 27 ஆம் திகதிவரை வெசாக் வாரம்!
இலங்கையில் 2024 வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (21) ஆரம்பமாகிறது .
அதோடு எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தரின் வாழ்க்கை
புத்த பூர்ணிமா அல்லது வைசாகம் அல்லது விசாகம் மே மாத பௌர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை வெசாக் ஆகும்.
இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி பலவித சமய நிகழ்வுகள் இடம்பெறும்.
சித்தார்ந்த குமாரனின் பிறப்பு, புத்தர் நிலையை அடைதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று நிகழ்வுகளை முன்னிறுத்தி இப்பண்டிகை கொண்டாடப்படும்.
வெசாக் பண்டிகையின் போது செயல் ரீதியான நற்செயல்களுக்கும் கொள்கை ரீதியான நற்செயல்களுக்கும் முன்னுரிமையளிக்கப்படும்.
பௌத்த வழிபாட்டுத்தலங்களை மையமாகக் கொண்டு வெசாக் பண்டிகை நடத்தப்படும்.
பௌத்தர்கள் சீலங்காத்தல், போதி பூசை நடத்துதல், அன்னதானம் வழங்குதல், ஒலிப்பூசை நடத்துதல் போன்றவை இப்பண்டிகையில் அடங்கும் சிறப்பம்சங்களாகும்.
இலங்கையிலும் புத்த மக்கள் அதிகமாக வாழ்வதனால் வெசாக் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்படுகின்றது.