விசா நீடிப்பில் இழுபறி; இலங்கை வந்த வெளிநாட்டு குடும்பம் காணொளி
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசா நீடிப்பைப் பெற முயன்ற வெளிநாட்டு குடும்பத்தினர் அங்கு நடந்த முறையற்ற நடைமுறைகளால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இணையதளம் வாயிலாக விசா நீட்டிப்பு செய்ய முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர்கள் நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மன உளைச்சலுக்கு ஆளானதாக காணொளி
அங்கு முறையான வழிகாட்டல் இல்லாமலும், அதிகப்படியான கூட்ட நெரிசலாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர்கள் டிக்டொக் பக்கத்தில் காணொளி ஒன்றில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இறுதியில் விசா கிடைத்த போதிலும், அந்தச் சிறு கால நீடிப்பிற்கு இவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டது வீணான முயற்சி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கசப்பான அனுபவங்களுக்கு மத்தியிலும், மீதமுள்ள விடுமுறைக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த காணொளியில் தெரிவித்துள்ளனர்.