30 ஐ தாண்டிய பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்; ஏன் தெரியுமா!
பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அதாவது 30 வயதிற்கு மேல் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதால், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய சில பரிசோதனைகள் அவசியமாகின்றன.
இன்றைய நவீன உலகில் பெண்கள் அலுவலகம் மற்றும் குடும்பம் என இரு பணிகளையும் கவனிக்கும்போது, தங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துவது வழக்கமாக உள்ளது.

mammograms, Pap/HPV tests, blood pressure
ஆனால் அவ்வாறு அலட்சியப்படுத்துவது அவர்களின் உயிருக்கே உலைவைக்கலாம். எனவே 40 வயதாகும் பெண்கள் முதலில், உடல் பருமனைத் தவிர்க்க பிஎம்ஐ மற்றும் ரத்த அழுத்த பரிசோதனையை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
ரத்த சோகை மற்றும் எலும்பு
ரத்த சோகை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஹீமோகுளோபின், வைட்டமின் டி மற்றும் பி12 அளவுகளைச் சரிபார்ப்பது முக்கியம்.

குறிப்பாக, 30 வயதை கடந்த பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
நீரிழிவு மற்றும் கொழுப்பின் அளவு
45 வயதிற்கு மேற்பட்டோர் நீரிழிவு மற்றும் கொழுப்பின் அளவை கண்காணிக்க வேண்டும்.

60 வயதிற்கு மேல் எலும்பு அடர்த்தி குறைபாட்டை அறிய டெக்கா ஸ்கேன் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.
தோல் புற்றுநோய் அபாயம்
சுற்றுச்சூழல் மாசு காரணமாக தோல் புற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளதால், வருடத்திற்கு ஒருமுறை தோல் பரிசோதனையும் அவசியமாகிறது.

எனவே இந்த முறையான பரிசோதனைகள் பெண்களின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமையும்