எம்பி அருச்சுனாவின் தங்கம் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்தது எதற்காக; அச்சுறுத்தம் நடவடிக்கையா!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தனிப்பட்ட உதவியாளரான பெண்ணொருவர் ஊடகவியலாளர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
கொழும்பு கோட்டை நீதிமன்றில் நடைபெறும் போக்குவரத்து விதி மீறலுக்கான வழக்கு விசாரணைக்கு நேற்றைய தினம் , நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மன்றில் முன்னிலையாக தவறியமையால் , நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

ஏன் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்தார்...
அதனை அடுத்து கோட்டை போலீஸ் நிலையத்தில் தனது தனிப்பட்ட உதவியாளரான பெண்ணொருவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
இது தொடர்பில் அறிந்து செய்தி சேகரிப்பு பணிக்காக பொலிஸ் நிலையம் சென்ற ஊடகவியலாளர்களை , எம்பி அருச்சுனாவின் உதவியாளரான பெண் , புகைப்படங்கள் காணொளிகள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார்.
அதேவேளை , யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவருடன், குறித்த பெண் உதவியாளரை அருகில் வைத்திருந்தவாறே நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.