முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு; பலரும் இரங்கல்
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மறைந்த ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) விடுதலை போராட்டக் களத்தில் கடற்புலிகள் மகளிர் படையணியில் இருந்தவர் என கூறப்படுகின்றது.

ஆளுமைமிக்க போராளி
போராட்ட காலத்தில் கடற்புலிகள் படையினை சேர்ந்த மகளிர் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்தவர் என்றும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் புலம்பெயந்து அவுஸ்திரேலியா அவர் சென்றதாகவும் , இந்நிலையில் சுகயீனம் காரணமாக ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) நேற்று (23) உயிரிழ்நதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) க்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.