கண்டி, பெரஹராவில் பாவனைக்கு உதவாத 2,000 கறி பணிஸ்கள்
கண்டி, பெரஹராவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மனித பாவனைக்கு உதவாத கறி பணிஸ்கள் 2,000 கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டி மேயர் சந்திரசிரி விஜயநாயக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, கண்டி மாநகர சபை வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தலைமையிலான சுகாதாரப் பரிசோதகர் குழு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
கண்டி நகரில் மேற்கொண்ட சோதனை ஒன்றின் போது பழுதடைந்த 2,000 கறி பணிஸ்கள் அளவில் ஒரு பேக்கரியில் இருந்து கைப்பற்றப்பட்டன. பின்னர் மனித பாவனைக்கு உதவாத பணிஸ்கள் அழிக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கண்டி பெரஹரா காலமாக இருப்பதால் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற பொதுமக்கள் வழிகாட்டப்டுவதுடன் அதிகாரிகளும் இது விடயமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.