அரச சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் இருவர் அதிரடி கைது!
இலங்கையில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி மவுத் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 27 வயதுடைய அத்துரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
இன்றைய தினம் சந்தேகநபர்களை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.