நவம்பர் முதல் இலவச பைகளுக்கு தடை

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Magistrate Court
By Sulokshi Oct 01, 2025 02:00 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  ஷொப்பிங் பைகள் போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று (1)உயர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க ஒரு திட்டத்தை வகுக்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 நவம்பர் முதல் இலவச பைகளுக்கு தடை | Free Bags Banned From November

இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் அபேகோன் உள்ளிட்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது.

சிறப்பு அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களால் நுகர்வோருக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அவற்றின் மீது வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளால் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி உயர்நீதிமன்றில் இணக்கம் வௌியிட்டிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு அமைய பிரதிவாதிகள் செயற்படாமை காரணமாக இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டி ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, நவம்பர் 1 ஆம் திகதி முதல் ​ஷொப்பிங் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

அதன்படி, அந்த அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் நீதி மையம் இணக்கம் வௌியிட்டதால் வழக்கு விசாரணையை நிறுவுறுத்தி உத்தரவிடப்பட்டது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US