பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளை தீர்மானம்
சமீபத்திய எரிபொருள் விலை குறைப்பின்படி பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் நாளைக்குள் வெளியிடும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) வழக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவுகோலின்படி பேருந்து கட்டணங்களைக் குறைப்பதாகவும், அந்த அளவுகோலின்படி பேருந்து கட்டணங்களைக் குறைக்க முடியுமா என்பதை NTC இன்று கணக்கிடும் என்றும் அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
இதுவரை இரண்டு முறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எரிபொருள் விலை குறைப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பதைப் பார்க்குமாறு நான் NTC-யிடம் தெரிவித்தேன்.
அவர்கள் இன்று அதைக் கணக்கிட்டு, பேருந்து கட்டணங்களைக் குறைக்க முடியுமா என்பதை நாளைக்குள் தெரிவிப்பார்கள் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.