5 ஆயிரம் ரூபாயுடன் வந்த நடிகை; பாகுபலி "மனோஹரி ;5 நிமிடத்தில் பல கோடி வருமானம்
வெறும் 5 ஆயிரம் ரூபாயுடன் இந்தியா வந்து ஒரு காலத்தில் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட நடிகை ஒருவர், தற்போது வெறும் 5 நிமிடங்கள் நடித்தாலே பல கோடி வருமானம் ஈட்டுகிறார்.
அவர் வேறு யாருமல்ல, கனடாவில் பிறந்து வளர்ந்த கனேடிய நடனக் கலைஞரும் நடிகையுமான நோரா ஃபதேஹி தான். பாகுபலியில் "மனோஹரி" பாடலுக்கு ஆட்டம் போட்ட நோரா ஃபதேஹி, இந்தியாவிற்கு வந்த புதிதில் பல சிரமங்களை எதிர்கொண்டார்.
ஒரு பாடலுக்கு ரூ.2 கோடி
ஆரம்ப நாட்களில் சாப்பிடுவதற்கே வழியில்லாத நிலை. ஆனால் இப்போது நோரா ஃபதேஹி பெரிய அளவில் சம்பாதிக்கிறார்.
நோரா ஃபதேஹி, சல்மான் கான், வருண் தவான் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சினிமாவில் 5 நிமிடம் நடித்தாலும் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.
ஒரு நேர்காணலில் பேசிய நோரா ஃபதேஹி, இந்தியா வந்தபோது நிறைய கஷ்டங்களை சந்தித்ததாக கூறினார். அந்த நேரத்தில், நோரா ஒரு நாளைக்கு ஒரு முட்டை மற்றும் ரொட்டியை மட்டுமே சாப்பிட்டார்.
தனக்குக் கிடைத்த பணத்தின் பெரும்பகுதியைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வாங்கித் தரும் முகவர்கள் எடுத்துக் கொண்டதாகவும், அவர்கள் தனக்கு மிகக் குறைந்த சம்பளமே கொடுத்ததாகவும் நோரா ஃபதேஹி கூறினார்.
நோரா ஃபதேஹி தற்போது ஒரு படத்துக்கு ரூ.1 கோடியும், ஒரு பாடலுக்கு ரூ.2 கோடியும் வசூலிக்கிறார்.