காதலனால் போதைக்கு அடிமையான உயர்தர மாணவி
உயர்தர பாடசாலை மாணவி ஒருவர் போதைக்கு அடியாலி உள்ளதாக மாவத்தகம காவல்துறையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆண்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது குறித்து நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருந்தாலும், பெண்கள் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைக்கு அடிமையாகி இருப்பதும் மாவத்தகம பகுதியில் தெரியவந்துள்ளது என மாவத்தகம காவல்துறையின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ஆர்.எம்.எஸ்.ஏ. பத்மசிறி தெரிவித்தார்.
மாவத்தகம காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரது காதலன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போன்ற போதைப் பொருட்களை உட்கொள்ள ஊக்குவித்ததாகவும் தெரியவந்தது.
போதைக்கு அடிமையான அந்த மாணவி கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் பயிலும் மாணவி என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.