வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கரவண்டி கவிழ்ந்தது ; இருவர் காயம்
ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இன்று (01) காலை 6 மணியளவில் ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ தோட்டப் பகுதியில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதன் பின் ஆசனத்தில் பயணித்த பெண்ணொருவரும் பலத்த காயமடைந்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமற்போனமையினாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதுடன், விபத்தினால் முச்சக்கரவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.