சிறப்பாக செயல்படுகிறார் ; முதலமைச்சர் விஜய்க்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு!
முதலமைச்சர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழக அரசியலில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வருகை மிக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
காலம் காலமாக ஆட்சி புரிந்த இரு கட்சிகளை தோற்கடித்து, மக்களின் பேராதரவுடன் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆனார். சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கி, இன்று முதலவரானது தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் மாற்றங்களையும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழகத்தின் நிர்வாகம் மற்றும் மக்களுக்கான செயல்பாடு
அரசியலில் களமிறங்கிய பின்னர், மக்கள் சந்திப்பு, இளைஞர்கள் தொடர்பான நடவடிக்கைகள், பெண்கள் நலன், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, தமிழகத்தின் நிர்வாகம் மற்றும் மக்களுக்கான செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வர் விஜய் செயல்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அவருடைய செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நிதிமன்றத்தில் தமிழகம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் பி.கருணாகரன் ஆஜராகி, நான் ஏற்கெனவே இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜராகி இருந்தேன். தற்போது அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்றுள்ளதால், இந்த வழக்கின் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டும். வழக்கினை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்ற்றுக் கொண்ட நீதிபதிகள் முதல்வர் விஜய்யின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் பாராட்டத்தக்க கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார். தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் மாற வேண்டியுள்ளது. தற்போதைய செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் குறித்து நல்ல தகவல்கள் வருகின்றன. தமிழகத்திற்காக மகிழ்ச்சி அடைகிறோம் என நீதிபதிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது