P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை
CID - Sri Lanka Police
Airbus Bribery Scam
By Sahana
முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவிடம், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுமார் 4 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளது.
எயார்பஸ் வானூர்திக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பி.பி. ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US