யாழில் 18 வயது மாணவி 2 பிள்ளைகளின் தந்தையுடன் தலைமறைவு
யாழ்ப்பாணத்தில் தனியார் போக்குவரத்து சேவை நடத்தி வரும் வர்த்தகர் ஒருவரின் 18 வயது மகள், 36 வயதுடைய திருமணமான நபர் ஒருவருடன் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு குடும்பங்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
மாணவியுடன் சென்றதாகக் கூறப்படும் 36 வயதுடைய நபர் திருமணமானவர் என்பதுடன், இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மாணவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்ததாகவும், இதனை அவரது மனைவி அறிந்து கணவரிடம் எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த நபருடனான நட்பைத் துண்டிக்குமாறு கணவரிடம் அவர் கோரியதாகவும் கூறப்படுகிறது.
எனினும், அந்த தொடர்பு தொடர்ந்ததாகவும், பின்னர் மாணவி குறித்த நபருடன் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவி காணாமல் போனமை தொடர்பில் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மாணவியின் தந்தையுடன் முரண்பட்டதாகவும், இதன்போது தாக்குதல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாணவியுடன் சென்றதாகக் கூறப்படும் நபரின் மனைவிக்கும் எதிராக தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மை நிலைமை மற்றும் மாணவி தற்போது எங்கு உள்ளார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.