தடைகள் மத்தியில் சிக்கலான பேச்சுவார்த்தை ; போர் நிறுத்த நீடிப்புக்கு டிரம்ப் மறுப்பு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்போது அமுலில் உள்ள இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
எனினும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதனை பகிரங்கமாக மறுத்துள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களில் ஒரு ஆச்சரியமான மாற்றத்தைக் காண்பீர்கள் என நினைக்கிறேன்," என்று குறிப்பிட்ட அவர், போர்நிறுத்த நீடிப்பு அவசியப்படாது என்ற தொனியில் பேசினார்.
முன்னதாக, தற்போதைய போர்நிறுத்தம் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) முடிவடைவதால், அதற்குள் ஒரு தீர்க்கமான முடிவை எட்ட அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் தூதுக்குழுக்கள் முயற்சி செய்து வருகின்றன.
ஈரானிய எண்ணெய் வர்த்தக வலையமைப்புகள் மீது அமெரிக்கா நேற்று புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளன.