பல போராட்டத்திற்கு மத்தியில் கிடைத்த இடமாற்றம் ; நெகிழ்ச்சியில் ஆசிரியர்
திருமணமாகி 4 வருடங்களுக்கு பின்னர் இடமாற்றத்திலிருக்கும் அலைச்சல் ஒரு படியாக இன்றுடன் முடிவுக்கு வருகின்றது என திருமதி நிரேஸ் தனது மகிழ்ச்சி தகவலை சமூக வலைத்தளங்களில் பகீர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையின் அதிகஸ்ர கல்வி வலயமான மடு கல்வி வலயத்தின் குஞ்சுக்குளம் வித்தியாலயத்தில் 6 வருடங்களும் வட்டங்கண்டல் மகாவித்தியாலயத்தில் 3 வருடங்கள் என மொத்தமாக 9 வருட மன்னார் மாவட்டத்தின் ஆங்கில பாட கற்ப்பித்தலில் ஈடுபட்டு இன்றைய தினம் வலிகாமம் வலயத்தில் சில்லாலை றோக வித்தியாசாலையில் கடமைகளுக்காக இணைந்தார் திருமதி நிரேஸ்.
எந்த வித சிபாரிசுகளோ அதிகார அழுத்தங்களோ அற்று விண்ணப்பித்த இடமாற்ற விண்ணப்பத்திற்க்கான இடமாற்றம் பெற்றே வரனும் என விரும்பியிருந்தேன் அவ்வாறே அமைந்திருந்தது மகிழ்ச்சி.
அப்படி நடந்திருக்காட்டி கடந்த ஜனவரியில் எழுதியதை போல அடுத்த 5 வருடம் சம்பளமற்ற லீவு போட வைச்சிட்டு பிறகு ஒருவருசம் வேலை செய்து 15 வருசத்தில ஓய்வினை அறிவிப்பது என்பது தான் மாற்று திட்டமுமாக இருந்தது.
ஆனால் நேற்று பலருக்கு பதிலாளிகள் வராமல் விடுவித்தல் மறுக்கப்பட்டிருந்த நிலையிலும் எவ்வித மறுத்தலும் அற்று கிடைத்திருந்தது மகிழ்ச்சி.
19-02-2024 திகதியிடப்பட்ட இடமாற்றல் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் பாவப்பட்ட ஒருசிலர் யாழில் இருந்து இடமாற்றம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு சென்ற நிலையில் சிபாரிசுகளை உடையடவர்கள் இன்னும் நகரவேயில்லை இதனால் வெளிமாவட்டங்களில் நெடுங்காலம் பணிபுரிந்து இடம் மாற்றம் கிடைத்தும் பதில் ஆளணி போகததால் வர முடியாத நிலை பல ஆசிரியர்களுக்கு உள்ளது.
அப்படி எப்படியாவது வந்தாலும் இங்கு டேரா போட்டு உள்ளவர்களால் குறித்த பாடத்துக்கான இடைவெளி இருந்தாலும் பாடசாலை மொத்த ஆசிரியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விரும்பிய பாடசாலைகளை கோரி நியமனத்தை பெறமுடியாது.
திருமணமாகி 4 வருடம் இங்கயும் அங்கயுமாக இருந்த அலைச்சல் ஒரு படியாக இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.