உலக யோகா கிண்ணப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்ற இலங்கை வீரர்கள்
இந்தியாவின் டெல்லியில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய (Pt Deen Dayal Upadhyay) மண்டபத்தில் இன்று (27) நடைபெற்று வரும் UYSF யோகா அமைப்பின் 4வது உலக யோகா கிண்ணப் போட்டிகளில், இலங்கை அணி சர்வதேச ரீதியில் பெரும் சாதனையைப் படைத்துள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சென்ற அணியில் 5 வீரர்கள் வெவ்வேறு வயதுப்பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் இலங்கையின் நாமத்தைப் பொறித்துள்ளனர்.

இதற்கமைய தங்கப் பதக்கம் வென்ற சாதனையாளர்கள்:
S. கவின்: 6 - 7 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு (Sub Junior)
P. தினுக்ஸன்: 9 - 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு (Sub Junior)
K. மதுமிதா: 11 - 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு (Sub Junior)
L. சக்ஷயா: 13 - 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு (Sub Junior)
R. தனுஷியா: 19 - 21 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு (Sub Junior)