ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் ; 33 வருட அனுபவத்திற்குப் பிறகு விஜயின் அதிர்ச்சி அறிவிப்பு
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், எச்.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது,ரசிகர்கள் கடந்த 33 ஆண்டுகளாக எனக்குப் பலவற்றைத் தந்து, நான் நினைத்ததை விடப் பெரிய கோட்டையைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.
எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த அவர்களுக்காக, நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் என தெரிவித்தார். மேலும் "அடுத்த 33 ஆண்டுகளை மக்களுக்காகவே அர்ப்பணிக்கப் போகிறேன்.

வெறும் நன்றி மட்டும் சொல்லப்போவதில்லை. அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்காக நிற்பேன், நன்றிக்கடனைத் தீர்ப்பேன்." என குறிப்பிட்டார்.
அத்துடன் “வாழ்க்கையில் வெற்றிபெற நண்பர்களை விட வலிமையான ஒரு எதிரி தேவை. அப்போதுதான் நாம் இன்னும் வலிமையானவர்களாக மாற முடியும். சும்மா வருபவர்களையெல்லாம் எதிர்த்துக்கொண்டிருக்க முடியாது."
"விஜய் தனியாக வருவாரா அல்லது கூட்டணியாக வருவாரா எனப் பேசுகிறார்கள். நான் எப்போது தனியாக இருந்தேன்? 33 வருடங்களாக மக்களுடன்தானே இருக்கிறேன், அதுவே ஒரு பெரிய அணிதானே" என நடிகர் விஜய் குறித்த நிகழ்வில் தெரிவித்தார்.