30ரூபாய்க்கு ஆசைப்பட்டு இலட்சக்கணக்கில் இழந்த வர்த்தகர் ; அதிரடி காட்டிய நீதிமன்றம்
அதிக விலைக்கு நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வர்த்தகர்களுக்கு, இரத்தினபுரி மற்றும் மதுகம நீதிமன்றங்கள் இன்று ( 13 ) அபராதம் விதித்தன.
70 ரூபாவாக்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி தண்ணீர் போத்தல்களை 100 ரூபாவுக்கு விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட இரத்தினபுரி, குடுகல்வத்தவையில் உள்ள ஒரு உணவகத்திற்கும், இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் ரூ.100,000 அபராதம் விதித்துள்ளது.
ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 295 ரூபாவுக்கு விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட கிரியெல்ல, இடங்கொடவையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு, இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் ரூ.210,000 அபராதம் விதித்துள்ளது.
இதே நேரத்தில், ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 310 ரூபாவுக்கு விற்றதாக ஒப்புக்கொண்ட களுத்துறை, மதுகம பகுதியில் உள்ள ஒரு கடைக்கு, மதுகம நீதிமன்றம் ரூ.100,000 அபராதம் விதித்துள்ளது.