வெயிட் லாஸ் முதல் சர்க்கரை வியாதி வரை... இந்த காய் மிக சிறந்த உணவு!
பப்பாளி பழத்தின் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்தது தான். அதைப் போலவே, பப்பாளிக் காயும் மிகுந்த ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. பப்பாளி காயும் பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.இதில் விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, வைட்டமின் ஈ ஆகிய ஊட்டசத்துக்களுடன், நுண்ணூட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளன.
இது மட்டுமல்லாமல், இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது. பப்பாளிப் பழத்தை விட பப்பாளி காயில் ஆரோக்கியத்தை வழங்கும் பப்பேன் மற்றும் சைமோபபைன் போன்ற முக்கிய என்சைம்கள் உள்ளன.
எடை இழப்புக்கு உதவும் பப்பாளி காய்
பப்பாளி காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. கொழுப்பு கரைய, உடல் எடை குறைய நார் சத்து அதிகம் தேவை. மேலும், இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால், அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கும். இதனால், கலோரி உட்கொள்ளல் குறையும்.
பச்சை பப்பாளியில் நார்ச்சத்து மற்றும் செரிமான நொதிகள் நிறைந்துள்ளன. அவை சீரான செரிமானத்திற்கு உதவுகின்றன. ஆரோக்கியமான செரிமான அமைப்பு, அதிகப்படியான யூரிக் அமிலம் உட்பட உடலில் இருந்து கழிவுப்பொருட்களை முறையாக வெளியேற்ற உதவுகிறது. மேலும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
பச்சை பப்பாளியை அடிக்கடி சாப்பிடுவது உடலின் நச்சுக்களை இயற்கையான முறையில் நீக்க உதவுகிறது. இரத்த்தை சுத்திகரிக்கும் ஆற்றல் பெற்ற இந்த காய் நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் யூரிக் அமில அளவை கட்டுக்குள் (Health Tips) வைத்திருக்க உதவுகிறது.
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு பப்பாளிக்காய் பெரிதும் நன்மை அளிக்கும் காய்கறிகளில் ஒன்று. பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதி, இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. எனவே, பப்பாளி காயை அடிக்கடி உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
டீடாக்ஸ் திறன் கொண்ட பப்பாளி காயை தொடர்ந்து உட்கொள்வதால், இரத்தத்தை வடிகட்டும் சிறுநீரகத்தின் திறனும் மேம்படும். இதனால், யூரிக் அமிலம் மற்றும் பிற நச்சுக்களை உடலில் இருந்து வெளியேறும்.