சாமர சம்பத் தசநாயக்கவை நாளுமன்ற வளாகத்திலிருந்து துரத்தி விட்ட சபாநாயகர்
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பாராளுமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அறிவுறுத்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, தன்னுடைய வழக்கு விசாரணை ஒன்றின் நீதிமன்ற தீர்ப்புக்குறித்து கருத்து தெரிவித்தார்.
எனினும், நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாது என சபாநாயகர் தொடர்ந்தும் எச்சரித்தார். இதனையடுத்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் நீதிமன்ற தீர்ப்புக்குறித்து வழக்கின் சந்தேக நபரான ஒருவர் கருத்து தெரிவிப்பது தவறானது என்றுக் கூறினார்.
ஆனால், இதனை பொருட்படுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்து சபையில் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவரை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டார்.