இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் ; அதிகரிக்கும் எண்ணிக்கை
நடப்பாண்டில் இதுவரை 22 இலட்சத்து 58 ஆயிரத்து 202 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவிலிருந்து 510,133 சுற்றுலாப் பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 141,941 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 174,267 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 204,703 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 103,477 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 129,403 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 106,155 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் 154,609 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.