இந்தியாவிடமிருந்து மீண்டும் இலங்கை வசமாகும் முக்கிய பகுதி!
இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சாதகமான முடிவு அடுத்த மாதத்தில் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகவலை பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதத்திற்குள் இலங்கைக்கு சாதகமான வகையில் இப்பேச்சுவார்த்தை நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்கள் அடங்கிய திருகோணமலை எண்ணெய்க் குதத் தொகுதி மீண்டும் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 16 மாதங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளது. மேற்படி எண்ணெய்க் குதத் தொகுதியை முகாமைத்துவம் செய்வதற்காக பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் மற்றுமொரு நிறுவனமாக ட்ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிட்டெட் என்ற பெயரில் ஒரு நிறுவனமொன்றை நாம் உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த நிறுவனத்தின் ஊடாகவே மீண்டும் எண்ணெய்க் குதங்களை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், எமது நாட்டுக்கு பாதகமான எதிலும் இணக்கம் தெரிவிப்பதற்கோ கைசாத்திடவோ நாம் இடமளிக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார்.