கொழும்பில் உந்துருளி இரண்டாக உடைந்து விபத்து ; 3 பேர் மருத்துவமனையில்!
கொழும்பு ஹல்பராவ - பாதுக்க வீதியில் இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி, வீதியில் சென்ற பாதசாரி ஒருவரை மோதி, பின்னர் தொலைபேசி கம்பம் ஒன்றில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்த 18 வயது உந்துருளி ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த 17 வயதுடைய ஒருவரும் ஹோமாகம ஆதார மருத்துவமனையிலும், 75 வயதுடைய பாதசாரி பாதுக்க வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் தகவல்படி, 75 வயதுடைய பாதசாரி மது அருந்திவிட்டு வீதியில் சென்றபோது உந்துருளியில் மோதுண்டதையடுத்து, உந்துருளியை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்று தொலைபேசி கம்பம் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக, உந்துருளி இரண்டாக உடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து, அருகில் உள்ள வீடொன்றின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
மொரகஹஹேன காவல்துறை இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.