சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், இலங்கை காவல்துறையினர் சில உயர் அதிகாரிகளுக்கு புதிய இடமாற்றங்களும், மேலதிக பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு தற்போது வகிக்கும் குற்றச் செயல்கள் மற்றும் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பையும் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் டீ.சி.ஏ. தனபால வட மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராகவும், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் எஸ்.சி. மெதவத்த மேல் மாகாணத்துக்ப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் புத்திக சிரிவர்தன வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.