இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் முறைப்பாட்டாளரிடம் இருந்து 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற போது நேற்று (23) கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான சார்ஜன்ட் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் முறைப்பாடுகள் விசாரணை பிரிவில் கடமையாற்றியவராவார். தம்பலகமுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணத் தகராறு தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு தர வேண்டிய பணத்தை பெற்றுத்தர தேவையான ஏற்பாடுகளை செய்து தர முடியும் என கூறி, அதற்காக 5,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பொலிஸ் சார்ஜன்ட் கோரியுள்ளார்.
இந்நியைில், பொலிஸ் சார்ஜன்ட் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உப்புவெளி பொலிஸில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.