சடலமாக மீட்கப்பட்டாரா அலி கமேனி? இஸ்ரேலின் அறிவிப்பின் பின்னர் தொடரும் மர்மம்
Update: தற்போது வெளியான தகவல்களின் படி ஈரான் உயர்மட்டத் தலைவர் சடலமாக மீட்கப்பட்தாக இஸ்ரேல் அறிவித்தாலும் அலி கமேனி பாதுகாப்பான இடத்திலிருந்து கட்டளைகள் பிறப்பித்து வருவதாக ஈரான் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்த கமேனியின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமான ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார்
இந்நிலையில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தெஹ்ரான் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வௌியிட்டுள்ளார்.
இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.எனினும், அவர் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எவ்வாறாயினும் அலி கமேனியின் இறப்பு குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.