அமெரிக்க அரசியலில் அதிரடி மாற்றம் ; அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சியிடமிருந்து பல முக்கிய செனட் ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் ஜனநாயகக் கட்சி செனட் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, டெக்சாஸ், வட கரோலினா, தென் கரோலினா, ஒஹையோ, கன்சாஸ் மற்றும் அயோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றிகள் செனட் சபையின் அதிகாரச் சமநிலையை மாற்றியமைத்துள்ளன.
தேர்தல் முடிவுகளின் ஆரம்பக் கணக்கெடுப்புகளின்படி, ஜனநாயகக் கட்சி 54 ஆசனங்களையும் குடியரசுக் கட்சி 44 ஆசனங்களையும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய ஆசனங்களுக்கான முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.