அமெரிக்கத் தேர்தல் எதிரொலி ; இலங்கை பங்குச் சந்தையில் அதிரடி ஏற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களில் இன்று (04) குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்கான எதிர்வினையாக இலங்கையின் பங்குச் சந்தைச் சுட்டெண்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 421.45 புள்ளிகளால் அதிகரித்து 2.09 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதேவேளை, S&P SL20 சுட்டெண் 112.52 புள்ளிகளால் அதிகரித்து 1.97 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, இன்றைய வர்த்தக முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 20,541.12 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 5,835.09 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், இன்றைய தினம் 3.86 பில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.