இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய எரிபொருள் விலை
லங்கா இந்தியன் ஒயில் (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்கள் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையை லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவினால் அதிகரித்துள்ளன.
இதற்கமைய, இதுவரை 495 ரூபாவாக நிலவிய ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 515 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, LIOC மற்றும் Sinopec எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 95 பெற்றோலைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இனி ஒரு லீற்றருக்கு 515 ரூபாவைச் செலுத்த வேண்டியிருக்கும்.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் வாகன உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் மேலதிக செலவுச் சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.