தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ; விஜய் வீடு தேடி சென்ற முதல் பூங்கொத்து!
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பிரதான ஜோதிடர் ஜோதிடர் ராதன் பண்டித் ஒரு பூங்கொத்துடன் TVK தலைவர் விஜயின் இல்லத்திற்குச் சென்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (04) நடைபெறுகிற நிலையில் பிரதான ஜோதிடர் பூங்கொத்துடன் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தவெக 140 தொகுதிகளிலும் முன்னிலை
234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை வெளியாகியுள்ள 232 தொகுதிகளுக்கான முடிவில் தவெக 140 தொகுதிகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும், திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.
இதேவேளை விஜய் வெளியே செல்லும் போது அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதுடன் விபத்துக்குள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பணியில் 300 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.