பிரபல பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்; மூடி மறைத்த அதிபர்!
மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் அதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று (17) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதுரெலிய மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியருக்கு எதிராக இதற்கு முன்னரும் முறைப்பாடு
14 வயதுடைய மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை கைதுசெய்யப்பட்ட ஆசிரியருக்கு எதிராக இதற்கு முன்னரும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை இன்று (18) மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆசிரியர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.