உதயநிதி ஸ்டாலின் கைது ; திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்; பரபரக்கும் தமிழகம்
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறுபேச்சு , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் தீவிர முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது "கைது செய்யாதே, கைது செய்யாதே, உதயநிதி ஸ்டாலினை கைது செய்யாதே" என அவர்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் கோஷங்களை எழுப்பினர்.

முதல்வர் விஜய் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி என திமுக தரப்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த கைது நடவடிக்கையின் போது, நீலாங்கரையில் அமைந்துள்ள உதயநிதியின் வீட்டிற்கு மிக அருகில் வசிக்கும் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், தனது வீட்டின் மாடியில் இருந்துகொண்டு இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வைரலாகி வருகிறது.