எரிபொருள் மீதான வரி அதிகரிப்பு - மக்களுக்கு மேலும் சுமை ; அரசாங்கத்தை சாடும் நாமல்

Fuel Price In Sri Lanka Namal Rajapaksa Sri Lanka Sri Lankan Peoples
By Sahana Nov 08, 2026 05:40 PM GMT
Report

எரிபொருள் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் இறுதிச் சுமையைப் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை

நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் ஒருபுறம் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மறுபுறம் எரிபொருளுக்கு சிறிய அளவிலான நிவாரணம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் அதன் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் மீதான வரி அதிகரிப்பு - மக்களுக்கு மேலும் சுமை ; அரசாங்கத்தை சாடும் நாமல் | Tax Hikes Burden People Namal Criticizes Governmen

குறிப்பாக, எரிபொருள் மீதான வரியையும் அரசாங்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், கப்பல்களில் இருந்து இறக்கப்படும் எரிபொருளின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும், தரகுக் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதாகவும் அரசாங்கம் கூறுவதாகக் குறிப்பிட்டார்.

எனவே, குறைந்தபட்சம் எரிபொருள் மீதான வரியையாவது அரசாங்கம் குறைக்க வேண்டும் என வலியுறுத்திய நாமல் ராஜபக்ஷ, எரிபொருள் வரியைக் குறைப்பதே நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கை எனவும், அதுவே மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியாகவும் இருந்தது எனவும் தெரிவித்தார்.

ஆனால், தற்போதுள்ள வரி அளவைவிட அதிகமான வரி எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ளதால், அதன் இறுதிச் சுமை பொதுமக்கள் மீதே சுமத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்ந்துள்ளதாகவும், ஆனால் மக்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க அமைச்சர்கள் நாட்டில் தற்போது எரிவாயு வரிசைகள் இல்லை எனக் கூறுகின்ற போதிலும், கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று பார்வையிட்டால் மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் தொடர்பில் தொடர்ந்து பேசுவதை அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

எரிபொருள் மீதான வரி அதிகரிப்பு - மக்களுக்கு மேலும் சுமை ; அரசாங்கத்தை சாடும் நாமல் | Tax Hikes Burden People Namal Criticizes Governmen

மீண்டும் புதிய வரிகளை விதிப்பதா அல்லது திருடர்களைப் பிடிப்பதாகக் கூறி விசாரணைகளை முன்னெடுப்பதா எனக் கேள்வி எழுப்பிய அவர், மக்களின் அன்றாடப் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், பொய்யான ஆதாரங்களை உருவாக்கி எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தற்போது அந்த நடவடிக்கைகள் பொதுமக்களையும் பாதிக்கும் நிலையை எட்டியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் குறைந்தபட்ச பொருளாதார வளர்ச்சியைக்கூட ஏற்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் வேறு ஒருவரை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் விமர்சித்தார்.

அத்துடன், நாட்டின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கோ, மக்களின் வாழ்க்கைச் செலவைத் தாங்கக்கூடிய அளவிற்குக் குறைப்பதற்கோ, பாடசாலை மாணவர்களின் கல்விச் செலவைக் குறைப்பதற்கோ அல்லது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கோ அரசாங்கம் இதுவரை வெற்றிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பணவீக்கம் 8 சதவீதத்தைக் கடந்துள்ளதாகவும், அது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

சுற்றுலா சென்ற இடத்தில் அனர்த்தம் ; காணாமல்போன நான்கு இளைஞர்களும் சடலங்களாக மீட்பு

சுற்றுலா சென்ற இடத்தில் அனர்த்தம் ; காணாமல்போன நான்கு இளைஞர்களும் சடலங்களாக மீட்பு

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US